பல கோடி சொத்து.. KGF 2 நடிகர் சஞ்சய் தத்க்கு எழுதி வைத்த ரசிகை
சஞ்சய் தத்
பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சஞ்சய் தத். சுமார் 40 ஆண்டுகளாக 135 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
யஷ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த KGF 2, விஜய்யின் லியோ போன்ற பிளாக் பஸ்டர் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
சஞ்சய் தத் மீது உள்ள அன்பின் காரணமாக ரசிகை ஒருவர் தனது சொத்துக்களை சஞ்சய் தத்க்கு எழுதி வைத்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
அதிர்ச்சி செயல்
ஆம், மும்பையைச் சேர்ந்த நிஷா பாட்டீல் என்ற 62 வயது ரசிகை ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தபோது தனது பெயரில் வங்கியில் உள்ள ரூ. 72 கோடி பணத்தை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
ஆனால், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் அறிந்தபோது, அந்த பணத்தை வாங்க மறுத்து, அந்த சொத்துக்களை ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.