உங்கள் பிள்ளையிடம் காட்டுங்க! அசிங்கமாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ரேஷ்மா

biggboss Reshma Pasupulet
By Edward May 13, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தப்பின் பிரபலமானவர்கள் பலர். அந்தவகையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரேஷ்மா. ஆரம்பகாலத்தில் இருந்து பல கஷ்டங்களை கடந்து தன் ஒரு மகனுடன் தனிமையில் இருந்து வருகிறார்.

புஷ்பா கதாபாத்திரம் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து போட்டியாளராக களமிரங்கினார். பிக்பாஸ் வீட்டில் தான் பட்ட கஷ்டங்களை கூறி அனைவரையும் ஈர்த்து சில நாட்களிலேயே வெளியேறினார். இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுசூடான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் ஆடைகள் சம்பந்தமான யூடியூப் சேனலை ஆரம்பித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டதற்கு ரசிகர் ஒருவர் இது போல் உடையை ஏன் அணிகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் இது போன்று உடை அணிந்து கொண்டு சென்று உங்கள் பிள்ளையிடம் காட்டுங்க என்று கருத்தினை பதிவிட்டார்.

உடனே அதற்கு ரேஷ்மா, நீங்கள் ஏன் இப்படி முகம் தெரியாத கணக்கில் இருந்து கமெண்ட் போடுறீங்க என்று பதிலடி கொடுத்துள்ளார். இதுபோன்ற பல கருத்துகளை சமாளித்து வருகிறேன் என்று கூறியுமுள்ளார்.