க்ளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் லாஸ்லியா! அசிங்கப்படுத்திய ரசிகருக்கு பதிலடி..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் தற்போது சினிமாத்துறையில் ஜொலித்து வருகிறார்கள். அந்தவகையில் பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிக்பாஸ் வாய்ப்பினை பெற்றார்.
நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது 4 படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இதற்கிடையில் அவரின் தந்தை மரணத்திற்கு பிறகு அதிர்ச்சியில் இருந்து தற்போது மீண்டும் வரும் லாஸ்லியா போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார்.
விதவிதமான ஆடையில் போட்டோஹுட் எடுத்து வரும் லாஸ்லியா சமீபத்தில் பச்சை நிற ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதை பார்த்து ரசிகர் ஒருவர், அவனவன் கொரோனால செத்துக்கிட்டு இருக்கான் உனக்கு போட்டோஹுட் தேவையா என்று மெசேஜ் செய்து அசிங்கப்படுத்தி விமர்சித்துள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான நீலு தயவு செய்து இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணாதீங்க. அதனால் இதையெல்லாம் பார்க்காமல் இருக்கலாம் பிரதர் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை கூறி ஆதரவாக பேசி வருகிறார்கள்.





