தளபதி 67 படத்தில் 20 வயதான டிக்டாக் பிரபலம்!! ஷாக்காகி கிரிஞ்ச் செய்யும் நெட்டிசன்கள்

Vijay Lokesh Kanagaraj
By Edward Feb 02, 2023 11:35 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வாரிசு படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு வசூலும் பெற்று வருகிறது.

அப்படத்தினை தொடர்ந்து தன்னுடைய 67வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற லிஸ்ட்டோடு பூஜையும் நடைபெற்றது.

தளபதி 67 படத்தில் 20 வயதான டிக்டாக் பிரபலம்!! ஷாக்காகி கிரிஞ்ச் செய்யும் நெட்டிசன்கள் | Fans Comment In Amala Shaji Instagram Post T67 Lcu

இப்படத்தில் கதாநாயகிகளாக நடிகை திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்கள். அவர்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், சேண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரின் கூட்டணியில் அமைத்துள்ளார் லோகேஷ். LCU-வில் அனிருத் இசை மிகபெரிய பங்காற்றவுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் கேஷ்மீருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், டிக்டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் 20 வயதான அமலா சாஜி விமான நிலையத்தில் லக்கேஷ் உடன் இருந்தபடி அது நடக்கிறது என்று கூறியபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

தளபதி 67 படத்தில் 20 வயதான டிக்டாக் பிரபலம்!! ஷாக்காகி கிரிஞ்ச் செய்யும் நெட்டிசன்கள் | Fans Comment In Amala Shaji Instagram Post T67 Lcu

அதற்கு ஒரு ரசிகர் ஒருவேலை T67-வா இருக்குமோ என்ற கருத்தினை கூறியுள்ளார். அதை Pinned Comment-ஆக வைத்த அமலா ஷாஜியை பலர் கிண்டல் செய்ததோடு லோகேஷ் அண்ணா வேண்டவே வேண்டாம் என்ற கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.

Gallery