ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்ல.. ஆனா.. பிக் பாஸை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்
இந்தியளவில் பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய ஐந்தாவது சீசன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது டாப் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இதில் இந்த வாரம் பிக் பாஸ் 5ல் அதிரடியான டிக்கெட் டு ஃபினாலே போட்டி கடுமையான முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட சுற்றில் இருந்து நிரூப் வெளியேற்றப்பட்டார். அதன்பின், நடந்த இரண்டாம் கட்ட சுற்றில் பாவனி மற்றும் தாமரை வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து நடந்த மூன்றாம் கட்ட சுற்றிலிருந்து பிரியங்கா மற்றும் ராஜு வெளியேறினார்கள்.
இதன்பின் நடந்த போட்டியில் சஞ்சீவ் வெளியேற, இறுதி போட்டியில் சிபியை அமீர் வென்று, டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார். இந்நிலையில், இந்த டிக்கெட் டு ஃபினாலே சுற்றின் நான்காம் டாஸ்கில், சில நிமிடங்கள் கூட நிற்கமுடியாமல், கால் வலியில் அமர்ந்துகொண்டு விளையாண்ட அமீர், இறுதி சுற்றில், வலி ஏற்பட்ட காலில் சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று போட்டியை வென்றார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிக் பாஸ் ஒரு ஸ்கிரிப்ட் என்று கூறி, 'இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு'.. 'ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லயாம்.. ஆனா டிக்கெட் டு ஃபினாலே மட்டும் ஜெயிப்பாராம்' என்று மீம் போட்டு கலாய்க்கின்றனர்.

