மகனை வைத்து விளம்பரம்!! அமலா பால் வெளியிட்ட வீடியோவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.
அமலா பால்
சிந்து சமவெளி படத்தில் நாயகியாக நடித்து பிரபலமாகி அதன்பின் மைனா படத்தின் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அமலா பால்.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, சில ஆண்டுகளுக்கு முன் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து இலை என்ற ஆண் மகனை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதாகவும் அமலா பால் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
மகனை வைத்து விளம்பரம்
தற்போது தனது மகனின் செயல்பாடுகளை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டு வீடியோ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதாவது, மகன் விளையாட்டு பொருட்களுடன் மற்றும் மாடர்னான உடைகளை அணிந்து எடுத்த வீடியோவில் உடைகளை தயாரித்த நிறுவனத்தை பிரமோட் செய்து பகிர்ந்துள்ளார்.
இதனை பலரும் குழந்தையை வைத்து பிராண்ட்-ஐ பிரமோட் செய்வது போன்றுள்ளது, ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.