நான் ரோஹித் ஷர்மா இல்ல! ஹிப் ஹாப் ஆதிக்கு ஷாக் கொடுத்த ரசிகர்

Rohit Sharma Hiphop Tamizha
By Karthick Raja Jul 07, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதன்பின் மீசையா முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த Pt sir மற்றும் இசையில் உருவான அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களும் ஹிட்டானது.

நான் ரோஹித் ஷர்மா இல்ல! ஹிப் ஹாப் ஆதிக்கு ஷாக் கொடுத்த ரசிகர் | Fans Misunderstood Hiphop Aadhi Is Rohit Sharma

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹிப் ஹாப் ஆதியை இந்தியன் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா என நினைத்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

தன்னை ரோஹித் சர்மா என நினைத்துக்கொண்டிருந்த ரசிகரிடம் நான் ரோஹித் சர்மா இல்லை, ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர் என அவர் கூறிவிட்டு செல்வதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..