காதலுக்கு ஓகே சொல் இல்ல அத செய்வேன்! அஜித் ரீல்மகள் அனிகாவை மிரட்டிய ரசிகர்கள்

anikha viswasam anikhasurendran ajithkumar
By Jai May 31, 2021 04:00 PM GMT
Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகர் நடிகைகளாக கொடிக்கட்டி பறப்பவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமான நடித்து தமிழில் பல படங்களில் நடித்து கலக்கினார்.

அதிலும் நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் நடித்து பெரியளவில் வரவேற்பை பெற்றார். சமீபத்தில் மறைந்த நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான குயின் வெப் சீரிஸில் நடித்தார்.

இதையடுத்து இணையத்தில் ரசிகர்களை போட்டோஹுட் மூலம் ஈர்த்து குட்டி நயன் தாராவாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னைபோல் கவர்ச்சி ஆடை அணிந்து ஆடிய பெண் வீடியோவால் அதிர்ச்சியடைந்து தற்போது அதிலிரிந்து மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த அனிகாவின் பல ஸ்வாரஷ்மான விஷயங்களை அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளார்.

உங்களை தீவிர ரசிகர் ஒருவர் காதலிப்பதாக கூறினால் என்ன செய்வீர்கள் காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அனிகா, ‘உண்மையாகவே இதுபோல் ஒரு ரசிகர் என்னிடம் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் எனக்கு மெயில் செய்து காதலிப்பதாகவும் கூறி வந்தார். அதை நான் பார்க்கவே பயப்பட்டேன் என தெரிவித்துள்ளார். பின் தற்போது அதிலிருந்து அப்படியே வெளியே வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.