நயனுக்கு அப்படி சமந்தாவுக்கு இப்படியா? சீதைக்கேற்ற ராமனாக மாறி வரும் விக்னேஷ் சிவன்..
தமிழ் சினிமாவில் போடாபோடி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். விஐபி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும், பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். நடிகை நயன் தாரா, விஜய் சேதுபதியை வைத்து நானும் ரெளடி தான் படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தினை இயக்கினார். இப்படத்திற்கு பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் காதல் நாயகி நயன் தாரா, சமந்தா, விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் டீசர் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் டூ டூ டூ என்ற அனிருத் இசையமைத்த பாடலின் பிரமோ வீடியோ வெளியாகியது. இப்படத்தின் ஆரம்பத்தில் முக்கிய இரு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் சில சலசலப்பு இருவரிடமும் உருவாகும் என்று நினைத்தனர்.
நயன் - சமந்தா இருவருக்கும் திரையுலகில் போட்டிகள் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இப்படத்தில் தோழிகளாக பணியாற்றியிருக்கிறார்களாம். சமீபத்தில் கூட நயன் தாரா பற்றிய கேள்விக்கு, சமந்தா கட்டியணைத்தபடி இருந்த வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
அதிலிருந்தே இருவரும் எப்படியானவர்கள் என்று ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார் சமந்தா. இந்நிலையில், படத்தில் தன் வருங்கால மனைவி நயன் தாராவிற்கு மட்டும் சேலையில் ஹோம்லி கேர்ல்லாகவும் சமந்தாவை குட்டை ஆடை அணியவிட்டு க்ளாமர் பெண்ணாகவும் விக்னேஷ் சிவன் இப்படத்தில் காட்டியிருக்கிறார்.
பாடல் காட்சியிலும் சரி படத்தின் காட்சிகளிலும் சரி சமந்தாவின் ஆடை விஷயத்தில் தாராளம் காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கட்டிக்கப்போகிற பொண்ணு என்று நினைத்து தானே நயன் தாராவை இப்படியான தோற்றத்தில் காட்டியிருக்கிறீர்கள் விக்கி என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நயன் தாரா ஏற்கனவே சீதையாக நடித்திருக்கிறார். அதனால் தான் சீதையை காத்த ராமனாக செயல்படுகிறீர்கள் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.