என்ன தம்பி என்ன ஆச்சு.. பீஸ்ட் குறித்து, விஜய்யை கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ஏப்ரல் 13ஆம் தேதியும். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியும் வெளியாகிறது. இதனால், பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று திரையுலகினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கேரளாவில் கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. இதில், பீஸ்ட் படத்தை விட கே.ஜி.எப் 2 படத்திற்கு விரைவாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது.
விஜய்யின் கோட்டை கேரளா என்று கருதப்பட்டு வரும் நிலையில், டிக்கெட் புக்கிங்கில் இப்படி விஜய் பின்னடைவை சந்தித்துள்ளாரே என்று சமூக வலைத்தளங்களில் எதிர்தரப்பு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
#Beast ~ #Kerala advance booking is below avg, Looks like need a good WOM to pickup..!!#KGFChapter2 ~ Filling Fast Morning & Ni8 Shows In Kerala !!#Vijay #Yash pic.twitter.com/CeREz4z9GK
— Cine South Track (@CineSouthTrack) April 4, 2022