அசிங்கமாக இல்லையா கமல் சார், இப்படியெல்லாம் பிக்பாஸில் பேசுவதற்கு
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல வருடங்களாக திறம்பட தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், இந்த சீசன் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வருகிறார்.
அதிலும் ப்ரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்த விஷயம் பெரும் பேசு பொருள் ஆனது, அதை தொடர்ந்தும் கமல் மாயாக்கு ஆதரவு தெரிவிப்பது ரசிகர்களுக்கு கோபம் தான்.
இந்நிலையில் கமல் சமீபத்தில் விசித்ரா தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியதற்கு பாராட்டு தெரிவித்தார், தைரியமாக வெளியே சொன்னதற்கு என்று. ஆனால், அதோடு நிறுத்தாமல், மற்றவர்கள் நலன் கருதி அவர்கள் பெயரை வெளியே சொல்லவில்லை, அதற்கு பாராட்டுக்கள் என சொன்னார்.
இது சமூக வலைத்தளத்தில் பெரும் பேசு பொருளாக ஆகியுள்ளது, எல்லோரும் என்ன கமல் சார் இப்படி பேசுகிறீர்கள், இதையெல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என்றல்லவா பேச வேண்டும் என கமல் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்