சொந்த தங்கச்சியை டீலில் விட்ட சூப்பர்ஸ்டார்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மாமன்னன் படத்தை பார்த்த ரஜினிகாந்த். "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ் பெயர் குறிப்பிடவில்லை.
இதையடுத்து ரசிகர்கள், "ரஜினிகாந்த் சொந்த தங்கச்சி கீர்த்தி சுரேஷை டீலில் விட்டுவிட்டார்" என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.