நயன்தாராவுக்கு ரூ.10 கோடி, சிம்புவுக்கு ஃப்ரீ.. தனுஷ் செய்யலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Dhanush Silambarasan Nayanthara
By Bhavya Jul 01, 2025 08:30 AM GMT
Report

நயன்தாரா - தனுஷ்

நடிகை நயன்தாரா, தனுஷ் பிரச்சனை குறித்து அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அதாவது, தனது திருமண ஆவண படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த அனுமதி பல முறை கேட்டும் தனுஷ் கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.

ஆனால், தனுஷ் அனுமதி கொடுக்காத நிலையிலும், தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார் நயன்தாரா.

இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது 3 செகண்ட் வீடியோவுக்காக ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

நயன்தாராவுக்கு ரூ.10 கோடி, சிம்புவுக்கு ஃப்ரீ.. தனுஷ் செய்யலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Fans Trolls Dhanush Nayanthara Issue

சிம்புவுக்கு ஃப்ரீ

இது ஒரு பக்கம் இருக்க, அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை கதைக்களத்தில் உருவாக உள்ள படத்திற்காக நடிகர் சிம்புவிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் அதற்கு தடையில்லா சான்று வழங்கி இருந்தார்.

தற்போது, இந்த தகவலை கேட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.  

நயன்தாராவுக்கு ரூ.10 கோடி, சிம்புவுக்கு ஃப்ரீ.. தனுஷ் செய்யலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Fans Trolls Dhanush Nayanthara Issue