உச்சகட்ட கோபத்தில் இருந்த ரசிகர்கள் ! சொதப்பும் பீஸ்ட் பட குழு வெளியிட்ட அப்டேட்
பீஸ்ட்
தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது என அனைவரும் அறிந்த விஷயம்.
ஏற்கனவே இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
இதற்கிடையே நேற்று பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் "நாளை" என ஒற்றை வார்த்தையுடன் பதிவிட்டு இருந்தார்.

கடுப்பில் ரசிகர்கள்
இதனால் கடும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் இன்று காலையில் இருந்த பீஸ்ட் பட அறிவிப்பை எதிர்பார்ப்பது இருந்தனர். மாலை 6 மணி ஆகியும் கூட அறிவிப்பு வரவில்லை, இதன் காரணமாக செம கடுப்பாகியுள்ளனர் ரசிகர்கள்.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதன் ட்ரைலர் கூட வெளியிடாமல் இருப்பது அனைவர்க்கும் குழப்பமாகவே உள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏர்ஜெட் ஓட்டுவது போன்ற புகைப்படத்துடன் டிரைலர் 2 ஏப்ரல்மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இப்போதிலிருந்தே விஜய் ரசிகர்கள் பீஸ்ட் கொண்டாட்டத்தை துவங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PM
— Sun Pictures (@sunpictures) March 30, 2022
Namma aattam inimey vera maari irukum ?@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L
தெலுங்கு மார்க்கெட்டில் அப்போதே மாஸ் காட்டிய ரஜினி ! இத்தனை கோடி காலெக்ஷனா?