இப்போதான் தெரியுது! பாரதிகண்ணம்மா வெண்பா வெளியேற என்ன காரணம்?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இரண்டாம் பாகம் என்று 8 வருடத்திற்கு பின் நடக்கும் கதையா இரு மகள்களுடன் பாரதி கண்ணம்மா வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
இருவருக்கும் விவாகரத்திற்காக ஒன்றாக இருந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இடையில் சமீபத்தில் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. எப்படியாவது பாரதியின் விவாகரத்து கனவை மாற்ற கண்ணம்மா போராடி வந்தார். அதேபோல் இயக்குனரும் இருவரும் சேருவது போன்ற பிரமோவை சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் சீரியல் கூடிய சீக்கிரமே முடியபோவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சீரியலில் இருந்து ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து படங்கள் வாய்ப்பு வருவதாக கூறி விலகினார்.
அப்படியில்லாமல் அதே தொலைக்காட்சியில் நடத்தும் குக்வித் கோமாளி 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது வெண்பாவாக நடித்து வந்த பரீனா அசாத் குழந்தை பெற்றப்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், வேறொரு தொலைக்காட்சி சீரியலான அபி டைலர் சீரியலில் இணைந்திருக்கிறார். இதிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வார இறுதிக்குள் முடிவடைய இருக்கலாம் என்று கூறப்படுகிறது.