சீரியல் நடிகை ஃபரீனா அசாத்தின் ஒரு வாட்ச் இத்தனை லட்சமா? ஆனால் நடந்ததே வேறயாம்...
ஃபரீனா அசாத்
சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் பயணத்தை ஆரம்பித்த நடிகை ஃபரீனா அசாத், தற்போது ஒருசில சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று வந்தார். சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று வரும் ஃபரீனா கட்டியுள்ள ஒரு வாட்ச் விலை எவ்வளவு என்ற உண்மையை பகிர்ந்துள்ளார்.
Hublot வாட்ச்
பேட்டியொன்றில், இத்தனை வருஷமாக இண்டஸ்ட்ரியில் இருக்கிறோம், இதை கூட வாங்கமாட்டோமா? சம்பாதித்ததில் Hublot பிராண்ட் வகையான நான் கட்டியுள்ள வாட்ச், டேக்ஸ் போக ரூ. 12. 8 லட்சம்.
ஆனால் இலங்கைக்கு ஒரு கான்ஸ்சர்ட் நிகழ்ச்சி போனபோது, அங்கு தங்கிருந்த அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று ஃபரீனா தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பலரும் எவ்வளவு அசாட்டா சொல்றாங்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.