என் பொண்ணு மேலயா கை வெச்ச!! துரந்தர் 2 கொடுத்த தைரியம்!! மகளுக்காக தந்தை செய்த செயல்..
துரந்தர் 2
ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் துரந்தர் 2.இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்க பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தது. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் துரந்தர் 2 படம் உலகளவில் ரூ. 930 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மகளுக்காக தந்தை
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள ராவத்பூரில் இருக்கும் குருதேவ் திரையரங்கில் துரந்தர் 2 படத்தை பார்க்க ஒரு பெண் தன்னுடைய தந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் இருக்கையில் இருந்த இளைஞர் படம் ஓடிக்கொண்டுருந்தபோதே, அப்பெண்னுக்கு பாலியல் தொந்தரவும், பாலியல் சீண்டல்களையும் கொடுத்துள்ளார். படம் முடிந்ததும் தன் தந்தையிடம் இந்த விஷயத்தை பற்றி கூறியிருக்கிறார்.
ஆத்திரமடைந்த தந்தை, அந்த நபர் திரையரங்கை விட்டு வெளியே வந்தபோது கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். என் மகள் மீதா கைவெச்ச என்று சொல்லி சொல்லியே அடித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
மகளுக்காக இளைஞரை அப்பெண்ணின் தந்தை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் பெண் மீது கை வைத்தால் தர்ம அடி தரவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
UP – In Kanpur, a man sitting in the adjacent seat harassed a young woman who had come to watch Dhurandhar-2. As soon as they stepped out of the hall, the woman's father beat up the accused and handed him over to the police.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 24, 2026
pic.twitter.com/J9qbsDUdok