20 வயதில் கதாநாயகி அறிமுகம்!! வீட்டுக்கு தெரியாமல் கமலுடன் அதை செய்து அடிவாங்கிய நடிகை வடிவுக்கரசி
80, 90-களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. இவர் 350ம் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வடிவுக்கரசி சீரியல்களில் நாயகி, வில்லி, அம்மா என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவுக்கரசி தனது வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 1987ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் நடிகை வடிவுக்கரசி தன்னுடைய 20வது வயதில் நடிகையாக அறிமுகமாகினார்.
என் அப்பா தூர்தர்ஷனின் பணியாற்ற வைத்தார். அப்போது கண்மணி பூங்காவில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்வதை பார்த்து, பாரதிராஜா இயக்கத்தில் ஒரு படத்திற்கு ஆடிஷனுக்கு அப்பாவுக்கு தெரியாமல் சென்றார். அப்படி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அல்ட்ரா மாடலான சித்ரா கதாபாத்திரத்தில் நடித்தேன்.
இப்படி நடிக்க போனது என் அப்பாவுக்கு தெரியாது. சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பேட்ச் ஒர்க் நடந்த போது என் அப்பாவிடம் வடிவுக்கரசின்னு ஒரு பொண்ணு நடிக்கிறான்னு போட்டோவை காட்டியிருக்கிறார்கள்.
என் மகள் கண்ணிமராவில் வேலை செய்றான்னு சொல்லி சமாளிச்சிட்டாரு. பின் என்னிடம் வந்து சினிமாவில் நடிக்கிறியான்னு கேட்டார். அதை தெரிஞ்சிகிட்டு என்னை கன்னத்தில் பளார்ன்னு விட்டு, சினிமால வேலை செய்ய சொன்னதுன்னு கண்டபடி திட்டி, பெரிய சண்டையே நடந்துச்சி என்று வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
அதன்பின், பாலு முருகன் என்பவர், என் அப்பாவிடம் காம சாஸ்த்திரம் என்ற படத்தில் ஜெய் சங்கருக்கு தங்கச்சியா உங்க மகள் நடிக்கனும் என்று கேட்டிருக்கிறார். வேண்டவே வேண்டாம்ன்னு சொல்லி பின் ஏனி படிகள் என்ற படத்தில் நடிக்க வைத்தார் என் அப்பா என வடிவுக்கரசி கூறியுள்ளார்.