ஒரே வருஷத்தில் மாமியார் கொடுமையை சகித்து கொள்கிறாரா நடிகை மகாலட்சுமி!! உண்மையை உடைத்த கணவர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த மகாலட்சுமி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். திருணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது, டின்னர், கோவில் என்றும் ரொமான்ஸ் செய்வதுமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
இப்படி சென்றிருக்கையில், ரவீந்தர் சமீபத்தில் தனியாக எடுத்த புகைப்படத்தை சோகத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் என்ன மனைவியுடன் பிரச்சனையா என்று கேள்வி கேட்டனர். அதன்பின் அடுத்த நாளே மகாலட்சுமியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் ரவீந்தர் பேட்டியொன்றில், தனியாக ஒரு போஸ்ட் போட்டது தப்பா? அவளும் தான் விதவிதமா போஸ் கொடுத்து போடுறா அவளை கேட்கமாட்டிங்க.
திருமணத்திற்கு பின் தான் நான் அதிகமாக சந்தோஷமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் மீடியாவில் அவள் இருப்பதால் சூட் முடிந்து லேட்டா வருவாள். எவ்வளவு லேட்டாக வந்தாலும் எத்தனை மணியானாலும் எனக்காக சமைத்து கொடுப்பாள்.
அதை மீறி பிரச்சனை வந்தாலும் அப்போது நடிப்பை நிறுத்துவிடவா என்று கேப்பாள் மகாலட்சுமி. என் அம்மாவிடம், மகாலட்சுமி மீது ஏரளமான வருத்தங்கள் வந்தாலும் அதை மகாலட்சுமி இதுவரை என் அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் சொன்னதில்லை என்று கூறியுள்ளார் ரவீந்தர். நாங்கள் பிரிகிறோம் என்ற செய்தி தான் அதிகமாக வைரலாகிறது.