நீ என்ன பெரிய ஆளா?.ஹோட்டல் ரூமில் அடி வாங்கிய அஜித்.. 14 ஆண்டு தீராத பகைக்கு காரணம் இதுவா?
கடந்த 2009 ஆம் பாலா இயக்கத்தில் அஜித் நான் கடவுள் படத்தில் நடிக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அன்புச்செழியன், பாலா, அஜித் இடையே மோதல் ஏற்பட்டது.14 வருடம் ஆகியும் அஜித் இவர்களுடன் பேசிக்கொள்வதில்லை.
இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். அஜித், பாலா மற்றும் அவருடைய படக்குழுவினர் எல்லாம் சேர்ந்து ஹோட்டலில் ரூம் எடுத்து படம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.
அப்போது பாலா அஜித் இடையே வாக்குவாதம் பிரச்சனை வந்ததாம். அதனால் அஜித் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி அங்கு இருந்து எழுந்தார்.
அப்போது பின்னாடி இருந்த நபர் அஜித்தின் முதுகில் தட்டி நீ என்ன பெரிய ஆளா என்று கூறினாராம். அங்கு இருந்து வெளியேறிய அஜித் 20 நாட்களுக்கு மேல் யாரிடமும் பேசவில்லையாம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.