ஜோதிகா சூர்யா இடையே பிரச்சனையா? .. அந்த விஷயத்தை தெரிந்து ஷாக்கான ரசிகர்கள்!!
கடந்த 2006 -ம் ஆண்டு நடிகர் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கினர். அதன் பின்னர் தொடர்ந்து தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் சூர்யா தனது 49 பிறந்தநாளைக் கொண்டாடினர். அதனையொட்டி சூர்யா 44, கங்குவா ஆகிய படங்களின் அப்டேட்டுகள் வந்தன. மேலும் பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோதிகா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதனை கவனித்த ரசிகர்கள் பலரும் ஏன் சூர்யாவுக்கு ஜோதிகா வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை? குடும்பத்தில் எதுவும் பிரச்சனை இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..