சூர்யா - ஜோதிகாவுக்கு சண்டையா? ஜோ- பெயரை நீக்கியதால் குழப்பம்.. ஷாக்கான ரசிகர்கள்..

Karthi Suriya Jyothika Aditi Shankar Viruman
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. தன் ஆசை மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல படங்களை தயாரித்து வெற்றி பெற்று வரும் சூர்யா, சமீபத்தில் கூட சூர்யா - ஜோதிகா தயாரித்த சூரரை போற்று படம் பல தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது.

சமீபத்தில் விருமன் படத்தினை கூட சூர்யா - ஜோதிகாவின் 2டி பிரடொக்ஷன் தான் தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த சில நாட்களில் சில சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

அதாவது படத்தில் முதலில் யுவன் சங்கராஜா சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை பாட வைத்துவிட்டு பின் அவரை தூக்கிவிட்டு சங்கர் மகள் அதிதி சங்கர் பாடியதை வைத்திருக்கிறார். இது தற்போது சர்ச்சையில் சிக்கிய நிலையில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது. 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களில் போஸ்டரில் சூர்யா - ஜோதிகா என்ற பெயர் இடம் பெறும். அப்படி விருமன் படம் ஆரம்பத்தில் கூட போஸ்டர் அப்படி தான் பதியப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதைய போஸ்டரில் வெறும் சூர்யா பெயர் மட்டுமே இடம் பெற்று வருகிறது.

ஜோதிகாவின் பெயர் எந்த போஸ்டரில் இடம்பெறவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். சூர்யா - ஜோதிகாவிடையே என்ன தான் ஆச்சி என்றும் இருவருக்கும் சண்டையா ஏன் இப்படி சூர்யா செய்கிறார்.

இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமே என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கான காரணத்தை சூர்யா தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.