கல்யாணத்திற்கு பின் விழும் முதல் அடி? சமந்தாவால் நயன்தாராவுக்கு வந்த வினை

Ajith Kumar Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward Jul 27, 2022 02:30 PM GMT
Report

நடிகர் நயன்தாரா 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமுன் என்று ஒரு வாரம் பிஸியாக இருந்துவிட்டு, நயன் தாரா ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டார்.

ஒலிம்பியாட் போட்டியின் இயக்கத்தில் பிஸியாகவும் அஜித்குமாரின் ஏகே62 படத்தின் கதை விசயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டி வேலைகள் முடித்துவிட்டு ஏகே 62 படத்தின் கதையை ஆரம்பிக்கவுள்ள விக்னேஷ் சிவன், அப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை நயன் தாரா தான் நடிக்க வைப்பார் என்று பலர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் விக்னேஷ் சிவன் நயன் தாரா பெயரை எடுத்துவிட்டு நடிகை சமந்தாவின் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்.

நான் இருக்கும் போது அதுவும் என்னால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறும் அளவிற்கு விக்னேஷ் சிவனை திட்டி சண்டை போட்டுள்ளாராம் நயன் தாரா. என்னைவிட்டு அவரை எப்படி நீ சொல்லலாம் என்று சமந்தாவை வைத்து சண்டை போட்டிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.