இளையராஜாவுடன் சண்டை போட்டுட்டு அவருடம் நிற்க முடியாது!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..
தனித்துவமான கதைக்களத்தினை கொண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். சமீபத்தில் வில்லன் ரோலிலும் குணச்சித்திர ரோலிலும் நடித்தும் வருகிறார்.
நடிப்பு, இயக்கத்தினை தாண்டி தற்போது இசையத்து இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கிய டெவில் படத்திற்கு இசையமைத்துள்ள மிஷ்கின் அப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
தனக்கு கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையை கற்றுக்கொடுத்த குரு ராமமூர்த்தி. என்னுடைய மற்றொரு குரு இருக்கிறார் அவர் பெயர் இளையராஜா.
8 வயது எனக்கு இருக்கும் போது என் அப்பா தோளில் அமர்ந்து சவாரி செய்யும் நேரத்தில் அன்னக்கிளி பாடலை கேட்க அப்பா தலைமுடியை இழுத்து நிறுத்தி கேட்டத்தில் இருந்து என் குருநாதர் ஆகிவிட்டார் இளையராஜா.
ஏன் இசையமைப்பாளர் ஆனாய் என்று கேட்கிறீர்கள். அதற்கு இளையராஜா தான் காரணம், அவருடன் சண்டை போட்டுவிட்டேன். அதனால் எனக்கு கோபம் அதிகம் வரும். மறுபடியும் அவருடன் போய் நிற்க முடியாது.
அதுமட்டும் இல்லாமல் எனக்கு ரொம்ப போர் அடுத்ததால், என்ன செய்றதுனே தெரியாமல் இசையமைக்க முடிவெடுத்தேன்.
இளையராஜா, ஏ ஆர் ரகுமான் தான் இசை ஆளுமைகளே, அவர்கள் தான் இசையமைப்பாளர்களே தவிர நான் அல்ல என்று மேடையில் கூறியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.