திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்!! ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்...
Royal Challengers Bangalore
Sexual harassment
Indian Cricket Team
IPL 2025
By Edward
யாஷ் தயாள்
ஐபிஎல் 2025 தொடரின் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த யாஷ் தயாள், உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர் மீது பாலியல் மற்றும் மோசடி செய்ததாக கூறி ஒரு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இளம்பெண் புகார்
அந்த புகாரில், யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் தொந்தரவு செய்தார்.
உடல்ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன், ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் இளம்பெண் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து விசாரணையை போலிசார் ஆரம்பித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.