கணவரோடு அதை பண்ணலனா விவாகரத்தா!! கோபத்தில் பொங்கிய நடிகை சாந்தினி..

Chandini Tamilarasan Gossip Today Sakshi Agarwal Divorce Tamil Actress
By Edward Jan 30, 2025 02:30 PM GMT
Report

சாந்தினி

நடிகர் சாந்தனுவின் 'சிந்து +2' படத்தில் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சாந்தினி. அதன்பின், வில் அம்பு, நையப்புடை, கவண், மன்னர் வகையரா, பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்தார்.

கணவரோடு அதை பண்ணலனா விவாகரத்தா!! கோபத்தில் பொங்கிய நடிகை சாந்தினி.. | Fire Actress Chandini Open Divorce Rumours

சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், சாந்தினி சின்னத்திரையில் 'தாழம்பூ' மற்றும் 'ரெட்டை ரோஜாவே' போன்ற தொடர்களில் நடித்தார். அதற்குப் பின்னர் 'குடிமகன்', 'பொம்மை', 'சைரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ல் நந்தா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் சாந்தினி, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது Fire என்ற படத்தில் நடித்துள்ள சாந்தினி அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சோசியல் மீடியாவில் பரவி விவாகரத்து செய்தி பற்றி பகிர்ந்துள்ளார்.

கணவரோடு அதை பண்ணலனா விவாகரத்தா!! கோபத்தில் பொங்கிய நடிகை சாந்தினி.. | Fire Actress Chandini Open Divorce Rumours

விவாகரத்தா

இதுபோல் செய்திகள் நான் எப்படி இருந்தாலும் போடுவார்கள். அதையெல்லாம் கண்டுக்கொள்ளவே வேண்டாம். சேர்ந்து போட்டோஸ் போடவில்லை என்றால் விவாகரத்து தான் சொல்வார்கள். சேர்ந்து போட்டோஸ் போடாமல் இருப்பது நம்முடைய தனிப்பட்ட விஷயம்.

இது எப்படி ஆரம்பித்தது என்றே எனக்கு தெரியவில்லை. நான் பேட்டியில் கூட அதிக முறை சொல்லி இருக்கிறேன், கோச்சிகிட்டு என் அம்மா வீட்டுக்கு கூட போனது இல்லை.

இதுகுறித்தி 2 வருஷமா சொல்லிட்டு தான் இருக்கிறேன், சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க, அதுப்பற்றி கவலைப்படக்கூடாது என்று நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.