கோபத்தில் ரச்சிதா மகாலட்சுமி சொன்னது!!உண்மையை உடைத்த Fire பட இயக்குநர்..
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு கொடுத்தது.
மேலும், இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரச்சிதா, பாலாஜி, சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் Fire என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ரச்சிதாவின் பிறந்த நாள் அன்று அவர் நடித்த Fire பட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டனர். இதனால் பலருக்கு அதிர்ச்சியடைந்து ரச்சிதாவை விமர்சித்தனர். இதனால் மனமுடைந்த ரச்சிதா, இயக்குநர் சதீஷை கண்டபடி விமர்சித்திருந்தார்.
இயக்குநர் சதீஷ்
இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் சதீஷ் மற்றும் சாந்தினி அளித்த பேட்டியொன்றில் விளக்கம் அளித்துள்ளனர். படத்தில் ரச்சிதா மிகவும் உழைத்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் உணவு கொடுத்திருந்து சந்தோஷமாக இருந்தார். ஒரு தயாரிப்பாளராக படத்தின் பிரமோஷனுக்காக் ரச்சிதாவின் காட்சிகளை பகிர்ந்தோம்.
ரச்சிதாவை அப்படி யாரும் பார்க்காததால் அது நெகட்டிவ் ஆக மாறியது. இது ரச்சிதாவிற்கு பிடிக்கவில்லை, ஏனென்றால், அவரை தப்பாக வைத்து செய்திகள் வெளியிட்டார்கள். ஒரு பெண்ணாக அவரை காயப்படுத்தி இருக்கும், நான் அவரிடம் விளக்கம் அளித்தேன்.
அவருக்கு காயப்பட்டதால், நான் எதுக்கு வரமாட்டேன் என்று சொன்னார், ஆனால் டப்பிங் அவர் தான், அவர் குரலில் டப்பிங் செய்து கொடுத்ததார். இதை அவர் நெகட்டிவ் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதன்பின் அவரை வற்புறுத்தவில்லை. இப்படத்தின் வெற்றி அவரை பேச வைக்கும் என்று இயக்குநர் சதீஷ் தெரிவித்துள்ளார்.