கமல்ஹாசன் வெளியிடப்போகும் பிக்பாஸ் 5ன் 8 போட்டியாளர்கள்? இந்த தொகுப்பாளினியும் இருக்காராம்..

contestants television kamalhaasan biggbosstamil5
By Edward Sep 25, 2021 07:10 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபல டிவியில் 4 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக தள்ளிச்சென்று வருகிறது.

பிக்பாஸ் 5ன் போட்டியாளர்கள் யார் யார் என்று கேள்வி எழுந்து வரும் நிலையில் கமல்ஹாசன் கூடிய சீக்கிரமே வெளியிடப்போகும் 8 போட்டியாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் 12 படங்களுக்கு மேல் நடத்து வந்த நடிகர் சந்தோஷ் பிரதாப், டாப் மாடலிங் துறையில் பிரபலமான பிரதைனி சர்வா, தமிழ் நன்றாகப்பேசக்கூடிய மாடல் கோபிநாத் ரவி, சின்னத்தம்பி சீரியலில் நடித்து பிரபலமாகி தற்போது வாய்ப்புத்தேடும் நடிகை பவானி ரெட்டி, நடிகை சூசன், குக்வித் கோமாளி மூலம் தற்போது பெரியளவில் பேசப்படும் பிரபலமான சுனிதா, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மனதை ஈர்த்து வரும் விஜே பிரியங்கா, கடைசியாக தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமாக வளம் வரும் ஜாக்குலின் போன்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.