அப்பா கிரிக்கெட்டில் புலி..மகள் படிப்புல புலி!! 23 வயதில் லட்சத்தில் சம்பாதிக்கும் கங்குலி மகள் சனா..
சவுரங் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிகெட்டரும், வங்கப்புலி, தாதா, லிட்டில் மாஸ்டர் என்ற பல்வேறு புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்தவர் சவுரங் கங்குலி. 90ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஜாம்பவனாக இருந்த கங்குலி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த தந்தையாக திகழ்ந்து வருகிறார். அப்பா கிரிக்கெட் ஜாம்பவான் என்றால் அவரது மகள் சனா கங்குலி படிப்பில் புலியாக இருக்கிறார்.
மகள் சனா கங்குலி
கொல்கத்தாவில் லொரேட்டோ ஹவுஸ் பள்ள்யில் படித்த சனா கங்குலி, 12 ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்ணை எடுத்தார். பின் வெளிநாட்டில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். லண்டன் பல்கலைகழக கல்லூரியில் பொருளாதார பிரிவில் படித்தும் பின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சில மாதங்களுக்கு முன் படிப்பை முடித்து சான்றிதழும் வாங்கினார்.
பொருளாதாரம், முதலீடு, நிதி மேலாண்மை போன்றவற்றில் சிறப்பாக மதிப்பெண்ணை பெற்று ல்வேறு முன்னணி நிதி சார்ந்த நிறுவனங்களான HSBC, KPMG, Goldman Sachs, Barclays உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பயிற்சியையும் பெற்றார்.
2022ல் உலகின் மிகப்பெரிய நிதி ஆலோசனை நிறுவனமான PwCவில் இண்டர்னாக பணிப்புரிந்து, Deloitte நிறுவனத்தில் சிலகாலம் பணிபுரிந்தார். அங்கு பயிற்சி நிலை ஊழியருக்கே சுமார் 30 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
இந்நிலையில், Innoverv என்ற லண்டனை சேர்ந்த நிறுவனத்தில் சனா கங்குலி பணியாற்றி வருகிறார். அங்கு அவருக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.