ஸ்டீவ் ஸ்மித் அவமானப்படுத்தியது பத்தாதா!! பாபர் அசாமை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்..

Pakistan national cricket team Babar Azam T20 World Cup 2026
By Edward Feb 08, 2026 11:17 AM GMT
Report

உலக டி20 போட்டிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றாலும் பாபர் அசாமின் ஆட்டத்தை விமர்சித்து முன்னாள் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளதோடு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டியும் இருக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் அவமானப்படுத்தியது பத்தாதா!! பாபர் அசாமை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்.. | Former Pakistan Player Basit Ali Insult Babar Azam

148 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தாலும் பாபர் அசாம் 18 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி நேரத்தில் தான் பாகிஸ்தான் அணி வீரர் பஹிம் அஷ்ரஃப் போராடி வெற்றிப்பெறச் செய்தார்.

இதுகுறித்து பாசித் அலி, பாபர் அசாமை டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்தான் ஏற்றுக்கொள்வேன், ஆனால் டி20 போட்டிகளில் அவர் எப்படி சூப்பர் ஸ்டாரானார்? 4வது வரிசையில் இறங்கிவர் ஜொலிக்க முடியவில்லை.

இது தனக்கு செட்டாகாது என்று நிர்வாகத்திடம் சொல்லும் தைரியம்கூட அவருக்கு இல்லை. ஒரு கிளப் கிரிக்கெட் வீரரை கேட்டால் கூட சொல்வார்கள், டி20 வடிவத்தில் பாபர் அசாமைவிட ஷதாப் கான், உஸ்கான் கான்ம், முகமது நவாஸ், பஹிம் அஷ்ரஃப் போன்ற சிறந்த வீரர்கள் என்று. ஏன் அணியிலுள்ள இளம் வீரர்களான சயிம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் கூட அவரைவிட சிறப்பாக ஆடுகிறர்கள்.

பிக்பாஸ் லீக் தொடரில், ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பாபர் அசாமுக்கு ஸ்ட்ரைக்கொடுத்தால் ரன் வராது என்று தெரிந்து, ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் கூட ஓட மறுத்தார். அந்த அவமானத்திற்கு பின்பும் பாபர் அசாம் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவ்ல்லை, அவரது ஆட்டம் டி20க்கு ஏற்றதல்ல என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.