ஒரு காலத்தில் பள்ளி ஆசிரியர்!! இப்போ சினிமாத்துறையில் திரும்பி பார்க்க வைத்த டாப் நடிகை...
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வந்தவர் தான் அந்த நடிகை. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்த அந்த நடிகை சில காரணங்களால் சினிமாவில் படவாய்ப்பில்லாமல் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி
அவர் வேறுயாருமில்லை நடிகை அனுஷ்கா ஷெட்டி தான். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
இதனை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை கூட்டியதால் பார்க்க குண்டாக தெரிந்ததால் வாய்ப்புகளை இழந்து வந்தார். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில், 41 வயதாகியும் திருமணம் செய்யாமலும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் காதி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரிலீஸானது. ஆனால் அப்படம் அனுஷ்காவிற்கு சரியான வரவேற்பை தரவில்லை.
அனுஷ்கா ஷெட்டி படங்களில் நடிப்பதற்கு முன் பெங்களூருவில் உள்ள ஈஸ்ட்வுட் பள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். மேலும் யோகா பயிற்சியாளராகவும் திகழ்ந்து வந்தார் அனுஷ்கா. அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
