உடல் எடை அதிகரிக்க அந்த விஷியத்தை செய்த கேப்ரிள்ள.. அழகுக்கு இது தான் காரணமா?
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கேப்ரில்லா. இவர் தனுஷ் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த '3' படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. தற்போது இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கேப்ரில்லா உடல் எடையை அதிகரிக்க பயன்படுத்தும் உணவு முறை குறித்து நாம் பார்க்கலாம். காலை வேளையில் வேக வைத்த 4 முட்டைகள், 10 மணிக்கு 10 இட்லி வரை சாப்பிடுவாராம். இதையடுத்து கொஞ்சம் பழம் எடுத்துக்கொள்வாராம்.
மதியம் மீல்ஸ் மற்றும் 3 நாள் நான் வெஜ் சாப்பிடுவாராம்.மேலும் மாலை நேரத்தில் நட்ஸ், பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவாராம்.