கர்ப்பமாக இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு!
Serials
Actress
Gabrella Sellus
By Karthick Raja
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை கேப்ரியலா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சுந்தரி சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.

இந்த சீரியலை முடித்த கையோடு நடிகை கேப்ரியலா தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். காரணம், அவர் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் இவருக்கு விமர்சையாக வளைகாப்பு நடந்துள்ளது.

கேப்ரியலாவின் சொந்த ஊரில் நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில், சுந்தரி சீரியல் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



