ஷூட்டிங் இல்லாத நேரத்தில் சில்க் என் வீட்டில் தான் இருப்பார்.. பல வருட ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்
சில்க் ஸ்மிதா
கவர்ச்சியான நடிப்பால் இளைஞர்களை கட்டி போட்டவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகையாக வலம் வந்த இவர், 1996 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் இன்று வரை மர்மமாக தான் இருக்கிறது.

பிரபல இசையமைபாளர், இயக்குனராக இருக்கும் கங்கை அமரன், சமீபத்தில் சில்க் ஸ்மிதா குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்," நானும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள். சில சமயங்களில் சில்க் ஷூட்டிங் முடிந்தவுடன் என் வீட்டிற்கு வந்து என் மனைவி மற்றும் மகன்களுடன் பேசிக் கொண்டு இருப்பார்".
"சில்க் ஸ்மிதா பார்த்தால் கிராமத்தில் இருந்து வந்தவர் போல் இருக்கமாட்டார். என்னை எங்குப் பார்த்தாலும் காட்டி பிடிப்பார். என்னை மச்சான் என்று தான் அழைப்பார். அவருடைய இறப்பு என்னால் ஜீரணிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
