இளையராஜாவுக்கு எழுதி கொடுத்தது நானா? ஆணவத்தில் ஏய் வாயை மூடி எனதொகுப்பாளரை கண்டபடி கத்திய கங்கை அமரன்!

Gangai Amaren Ilayaraaja
By Edward May 03, 2022 03:40 PM GMT
Report

தமிழகத்தில் சமீபத்திய விவாத செய்தியாக இருப்பது இளையராஜா அம்பேத்காரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு புத்தகத்தில் முன்னுரை எழுதியது தான் பிரச்சனையாக அமைந்துள்ளது.

அந்த மூன்று பக்கம் முன்னுரையை கங்கை அமரன் தான் எழுதி கொடுத்ததாகவும் பாஜக கட்சியை சேர்ந்து இப்படியாக நடந்து கொண்டாரா இளையராஜா என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான சமீபத்தில் கங்கை அமரன் கொடுத்த பேட்டியொன்றில் சர்ச்சையாக தொகுப்பாளரிடம் நடந்து கொண்டுள்ளார். முன்னுரை நான் எழுதி கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அப்போ இளையராஜாவின் பாடலுக்கு நான் மியூசிக் பண்ணி கொடுத்தேன் என்று சொல்றீங்களா என்று கத்தி பேசியுள்ளார். வாக்குவாதத்தில் பேசிய தொகுப்பாளரை ஏய், நான் சொன்னதுக்கு பதில் சொல்லு என்று கத்தி திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வாளியுடனும் நான் இருந்தேன் நான் தான் பாட்டு வரி எடுத்து கொண்டுத்தேனா என்றும் கூறியுள்ளார். போகப்போக பேச்சு அதிகமாக நான் தான் எழுதினேன் இப்போ என்ன என்றும் பேசியுள்ளார்.