இந்த நடிகைகளுக்கு இப்படிப்பட்ட அரியவகை நோயா!! வெளியான தகவல்..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் இடைவிடாமல் நடிப்பதால சில நோய்களால் பாதிக்கப்பட்டுவிடுவார்கள். அப்படி சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகள் சில அரியவகை நோயால் பாதிகப்பட்டு போராடி வருவார்கள். அந்தவகையில் எந்தெந்த நடிகைகள் பாதிக்கப்பட்டனர் என்று பார்ப்போம்.

அரியவகை நோய்
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு, சூடோபுல்பார் அஃபெக்ட் என்ற நரம்பியல் பாதிப்புள்ளது. இது ஒருவரின் சிரிப்பு மற்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நிலையாகும். நடிகை யாமி கெளதம், கெரடோசிஸ் பிலாரிசிஸ் என்ற சருமப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், ஆட்டோ இம்யூன் மற்றும் மூச்சுக் குழாய் ஆஸ்துமா என இரு உடல்நலப்பிரச்சனைகளால் பாதிகப்பட்டுள்ளார். நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுவர தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார்.

நடிகை சோனம் கபூர், ஃபிட்னஸாக இருக்கும் அவருக்கு சிறுவயதிலிருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராயைப்போலவே தோற்றமளிக்கும் நடிகை சினேகா உல்லால், ஆட்டோ இன்யூன் நோயால் பாதிக்கப்பட்டதால் 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்கக்கூட முடியாத நிலை இருக்கிறதாம்.

நடிகை லீசா ரே, வெள்ளை இரத்த அணுக்களை தாக்கும் ஒரு அரியவகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப்பின் அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.
