பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்!! இளையராஜாவை ஒதுக்குகிறாரா அவர் தம்பி கங்கை அமரன்

Gangai Amaren Ilayaraaja Premji Amaren Venkat Prabhu Gossip Today
By Edward May 31, 2024 10:30 PM GMT
Report

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார். அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் அவரது அண்ணன் வெங்கட் பிரபு.

பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்!! இளையராஜாவை ஒதுக்குகிறாரா அவர் தம்பி கங்கை அமரன் | Gangai Amaran Avoid Ilayaara For Premji Marriage

45 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் வருகிறார்.நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்து என்பவருடன் ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது என்று திருமண அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் பத்திரிக்கையில் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர் அந்தணன், தூரத்து உறவில் இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்யவுள்ளாராம்.

ஒரு மாதம் கழித்து தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறப்போவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து பேசிகையில், பத்திரிக்கையில் முக்கியமான பெயர் இளையராஜா பெயர் விடுப்பட்டு இருக்கிறது. அவர் தான் அந்த பத்திரிக்கையை அடித்திருக்க வேண்டும். எங்கேயும் அவரது பெயர் இல்லையே. அண்ணனை புகழ்ந்து தள்ளி வந்த கங்கை அமரன் ஏன் இதை செய்தோரோ என்று கேள்விகளை எழுப்பியும் தகவலை பகிர்ந்துள்ளார் அந்தணன்.

Gallery