தலைக்காட்டாத நடிகை கனகா!! உருவகேலி செய்த கங்கை அமரன்

Ramarajan Kanaka Gangai Amaren Gossip Today
By Edward Feb 11, 2026 01:30 PM GMT
Report

கனகா

கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை கனகா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கனகா, அம்மா இறந்தப்பின் தன்னுடைய வீட்டிலேயே பல ஆண்டுகளாக முடங்கியிருந்தார். அதன்பின் தற்போது பொதுவெளியில் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

தலைக்காட்டாத நடிகை கனகா!! உருவகேலி செய்த கங்கை அமரன் | Gangai Amaran S Remark On Actress Kanaka

கங்கை அமரன்

இந்நிலையில், தன்னை அறிமுகப்படுத்திய கங்கை அமரன் பேசியிருக்கும் விஷயம் தான் விமர்சனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அப்போது அவரிடம் கரக்காட்டக்காரன் 2 படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

தலைக்காட்டாத நடிகை கனகா!! உருவகேலி செய்த கங்கை அமரன் | Gangai Amaran S Remark On Actress Kanaka

அதற்கு கங்கை அமரன், இரண்டாம் பாகம் எடுத்தாலே இதைவிட முதல் பாகம் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். அந்த படத்தில் பேறு நடிகர்களையும் நடிக்க வைக்க முடியாது. கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை, செந்தில் படங்கள் பண்ணுவதில்லை, ராமராஜன் உருவம் மாறி போயிட்டார், கனகா குண்டாகிவிட்டாங்க.

இப்போது அவர்களை வைத்து எப்படி இரண்டாவது பாகத்தை எடுக்க முடியும் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.