அப்பா அம்மாவை அவமானப்படுத்தும் விஜய்! அலறவிட்ட கங்கை அமரன்..
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இசையமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்து வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் தம்பியாக அவருக்கு அடுத்து சினிமாவில் அறிமுகமாகியவர். அவர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த போது சில கருத்து வேறுபாடு காரணமாக 13 ஆண்டுகளுக்கும் மேல் இருவரும் பேசாமலும் பார்க்காமலும் இருந்து வந்தனர். சமீபத்தில் தான் பகையை மறந்து இளையராஜா சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வரும் கங்கை அமரன் முகமறியான் படத்தின் ஆடியோ ரிலீஸில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், சினிமாவில் நானும் அண்ணனும் வளர்ந்த கதையை ஆரம்பித்து பேசினார்.
அதன்பின் பணத்தை வைத்துக்கொண்டு வராமல் திறமைகளை வைத்துக்கொண்டு சினிமாவில் வளர வேண்டும். சமீபத்தில் விஜய் அம்மா அப்பாவை மதிக்காமல் அவருக்கு எதிராக வழக்கு போட்டது கஷ்டமாக இருந்தது.
வெளிப்படையாக நான் பெரியவன் என்ற முறையில் கூறுகிறேன், விஜய் பிறந்த போது அவரை எஸ் ஏ சந்திர சேகர், ஷோபனாவும் எப்படி வளர்த்தார்கள் என்று எனக்கு தெரியும்.
எத்தனை தோல்விகளுக்கு பிறகு விஜய்யை பில்டப் கொடுத்து தூக்கி விட்டுவர்கள். அவர்களை மறந்து விட்டு விலக்கி வைத்துள்ளது நலமாக இருக்காது. அம்மா அப்பாவை விட்டுவிடாதீர்கள் என்று விஜய் ரசிகர்கள் நீங்கள் கூறுங்கள் என்று பேசியுள்ளார்.
கங்கை அமரன் பேசிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..