அண்ணன் தம்பிக்கும் இந்த ஆணவம் இருக்கக்கூடாது! தலைக்கனம் தலைக்கேறி படுமோசமாக நடந்து கொண்ட கங்கை அமரன்..

Gangai Amaren Ilayaraaja
1 மாதம் முன்
Edward

Edward

ஊடகங்களில் தற்போது பெரிய பிரச்சனையாக பேசப்படுவது மோடியின் செயல்பாடுகள் அம்பேத்கரை போன்றுள்ளது, அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதிய விஷயம் தான்.

இதற்கு பலர் கண்டித்து கருத்துக்களை கூறி வந்தாலும் பாஜகவினர் உள்ளிட்ட ஒருசிலர் ஆதரவாக பேசி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். மூன்று பக்கம் முன்னுரையை கங்கை அமரன் தான் எழுதி கொடுத்ததாகவும் பாஜக கட்சியை சேர்ந்து இப்படியாக நடந்து கொண்டாரா இளையராஜா என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான சமீபத்தில் கங்கை அமரன் கொடுத்த பேட்டியொன்றில் சர்ச்சையாக தொகுப்பாளரிடம் நடந்து கொண்டுள்ளார். முன்னுரை நான் எழுதி கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அப்போ இளையராஜாவின் பாடலுக்கு நான் மியூசிக் பண்ணி கொடுத்தேன் என்று சொல்றீங்களா என்று கத்தி பேசியுள்ளார். வாக்குவாதத்தில் பேசிய தொகுப்பாளரை ஏய், நான் சொன்னதுக்கு பதில் சொல்லு என்று கத்தி திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வாளியுடனும் நான் இருந்தேன் நான் தான் பாட்டு வரி எடுத்து கொண்டுத்தேனா என்றும் கூறியுள்ளார். போகப்போக பேச்சு அதிகமாக நான் தான் எழுதினேன் இப்போ என்ன என்றும் பேசியுள்ளார்.

இந்த பேச்சிற்கு பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனமாகியுள்ளது. ஒரு நெறியாளரை எப்படி அவர் கடுமையான வார்த்தையை கொண்டு பேசலாம் என்று விமர்சித்து வருகிறார்கள்.

அண்ணன் புத்தி அப்படியே தலைக்கனத்தோடு சேர்த்து இவருக்கும் வந்திருக்கிறது என்று இளையராஜா பேசிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.