வந்தம்மா, வேலைய பாத்தோமான்னு இருக்கணும்!! வெற்றிமாறனை வம்புக்கு இழுத்த கஞ்சா கருப்பு..
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் பிதாமகன். இப்படத்தில் கஞ்சா குடுக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடி நடிகராக அறிமுகமாகியவர் கஞ்சா கருப்பு.
தயாரிப்பில் நஷ்டம்
கருப்பு ராஜா என்ற பெயரை எடுத்து விட்டு கஞ்சா கருப்பு என்று பெயர் வர இப்படமும் ஒரு காரணமாக அமைந்தது. இப்படத்தினை அடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஞ்சா கருப்பு 50க்கும் மேற்பட்ட படங்களில் ரசிக்க வைத்தவர். அப்படி நடிப்பை தாண்டி 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தினை தயாரித்தும் நடித்தும் இருந்தார். இப்படத்தினை தயாரித்த கஞ்சா கருப்பு படம் வெளியாகாமல் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு நடுத்தெருவிற்கு வந்துவிட்டேன் என்று பல மேடைகளில் கூறியிருந்தார.
ராஜராஜ சோழன் இந்து
இதன்பின் 2017ல் பிக்பாஸ் முதல் சீசனில் 14 நாட்கள் இருந்து வெளியேறினார். சமீபத்தில் பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கஞ்சா கருப்பு, வந்த புது இயக்குனர் எல்லாம் சும்மா இல்லாம, ராஜராஜ சோழன் இந்து என்று பேசுறாங்க. வந்தம்மா வேலைய பாத்தோம்மா பணத்த சம்பாரிச்சோமா, ரெண்டு விட்டை வாங்கினமோ போனமான்னு இருக்கனும் என்று கூறியுள்ளார். இதை இயக்குனர் வெற்றிமாறனை மறைமுகமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.