6 ஆயிரம் கோடி பட்ஜெட்...மகன் திருமணம் முடிந்த கையோடு கெளதம் அதானி எடுத்த முடிவு..
கெளதம் அதானி
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகாவின் திருமணம் கடந்த ஆண்டு பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்தது. அம்பானி குடும்பத்தை தொடர்ந்து கெளதம் அதானி குடும்பத்தில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கடந்த வாரம் அதானியின் மகன் திருமணம் நடந்த நிலையில் அமெரிக்க அதிபர், கெளதம் அதானி மீதும், அதானி குழுமம் மீது அந்நாட்டு நீதித்துறை வழக்கு தொடுத்துள்ள சட்டத்தையே 6 மாதம் பயன்படுத்தவும் அதனை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கும் வகையில் உத்தரவிட்டிருந்தார்.
6 ஆயிரம் கோடி
6 மாதம் விடுதலை பெற்றிருந்த அதானி, தனக்கு சொந்தமான அமெரிக்காவின் மயோ கிளினிக்குடன் இணைந்து மும்பை மற்றும் அகமதாபாத் பகுதியில் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளை நிறுவ இருக்கிறாராம்.
6 ஆயிரம் கோடி முதலீடு செய்து இரு இடங்களில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மல்டி ஸ்பெஷலிட்டி கொண்ட மருத்துமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை நிறுவ இருப்பதால் இந்தியா முழுவதும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கெளதம் அதானி.