எதற்கும் உதவாதவர் அவர்! கடுமையாக சீறிப்பாய்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

rishabhpant gautamgambhir indvssa
By Jai Jan 07, 2022 05:24 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்ரிக்காவிற்கு சென்று டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு ரெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தலா ஒரு வெற்றி வீதத்தில் இருந்து வருகிறார்கள். இப்போட்டியில் ஒருசிலரை தவிர எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் கீப்பர் பங்கினை வகித்து வரும் ரிஷப் பண்ட் தொடர்பான கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். மூத்த வீரர்கள் தான் அப்படி என்றால் அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய இளம் வீரரான ரிஷப் பண்ட் மீண்டும், மீண்டும் சொதப்பி வருகிறார். முக்கியமான கட்டங்களில் இறங்கி விளையாடும் அவர் பொறுப்புடன் விளையாடுவதில்லை என பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், ரிஷப் பந்த் சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவதும், ஒரு போட்டியை எப்படி கணித்து விளையாடுவது என்று தெரியாமல் ஆடுவதும் வியப்பாக இருக்கிறது.

அவர் தனது முழு திறமையை காட்டவில்லை, தயவுசெய்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என குற்றம் சாட்டியுள்ளார். தோனியின் இடத்திற்கு எடுக்கப்பட்ட வீரர் என்பது மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார். அவர்கூறியது தவறாக படவில்லை என்று பல ரசிகர்கள் ரிஷ்ப் பண்ட்டை விமர்சித்தும் வருகிறார்கள்.