மக்களை மதிக்காதவர் விஜய்..அப்படியென்னால் அதானே அர்த்தம் !! யோசிக்காமல் விமர்சித்த நடிகை கெளதமி..

Vijay Gautami ADMK Thamizhaga Vetri Kazhagam
By Jai Apr 19, 2026 07:30 AM GMT
Report

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் அரசியல் குறித்து சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்களை வரை விமர்சித்து பேசி வருகிறார்கள்.

மக்களை மதிக்காதவர் விஜய்..அப்படியென்னால் அதானே அர்த்தம் !! யோசிக்காமல் விமர்சித்த நடிகை கெளதமி.. | Gautami Slams Vijay Over Campaign Cancellations

அதிலும் கரூர் சம்பவம் ஆரம்பித்து, விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் குறித்தும் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரம் 23ல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகலும் முழுவிச்சாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகை கெளதமி

அந்தவகையில், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகை கெளதமி, விஜய்யின் அரசியல் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார். அதில், சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, மக்களால் தான் ஒருவர், ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கமுடியும்.

மக்களை மதிக்காதவர் விஜய்..அப்படியென்னால் அதானே அர்த்தம் !! யோசிக்காமல் விமர்சித்த நடிகை கெளதமி.. | Gautami Slams Vijay Over Campaign Cancellations

அப்படியிருக்கையில், அந்த மக்களோடு மக்களாக இருப்பது தான் சரி. சினிமாவில் இருப்பதால் பெரும் புகழும் கிடைத்துள்ளது என்றால் அது இந்த மக்களால் தான் கிடைத்தது.

அப்படி இருக்கும்போது அந்த மக்களை நேரடியாக சந்திப்பதுதான் மரியாதையாக இருக்கும். மக்களை சந்திக்கவில்லை என்றால் அவருக்கு மக்கள் மீது மதிப்பு இல்லை என்று தானே அர்த்தம் என்று பேசியிருக்கிறார் நடிகை கெளதமி.