அந்தமாதிரி கதாபாத்திரம்! தனுஷ் படத்தில் சினேகாவிற்கு பதிலாக இந்த பிக்பாஸ் நடிகை தானாம்?
தமிழ் சினிமாவில் எவ்வளவுதான் மாஸ் நடிகர்கள் ஆனாலும் விருதுகள் வாங்குவது கிடையாது. கடின உழைப்பால் நடிப்பில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னேறியவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் தனுஷ்.
ஆரம்பகாலத்தில் இவரெல்லாம் நடிகரா? என்று என்னை கேலி செய்தனர் என்று தனுஷே பல முறை கூறியிருக்கிறார். அதை உடைக்கும் விதமாக அவரின் அண்ணன் செல்வராகவன் படங்கள் உதவியது. அதில் பெரிய ஹிட் கொடுத்த படம் புதுப்பேட்டை.
2006ல் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வசூல் ஓரளவு வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் நடந்த சில அனுபவங்களை செல்வராகவன் கூறியுள்ளார்.
முதலில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த சினேகாவை தேர்வு செய்யவில்லையாம். சினேகாவின் கதாபாத்திரத்தில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் தான் கமிட் செய்யப்பட்டாராம்.
ஆனால், அதற்கு காயத்ரி ரகுராம் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிவித்தாராம்.
அப்படி அவர் நடித்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்குமா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.