விவாகரத்தாகி தனியில் இருக்கும் நடிகையை மறுமணம் செய்ய சொன்ன நபர்! கோபத்தில் பிக்பாஸ் காயத்ரி

biggboss bjp gayathriraghuram
By Edward Mar 28, 2022 04:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி ரகுராம். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் நடன இயக்குனராக பணியாற்றியும் வந்தார்.

பிக்பாஸ் எண்ட்ரி:-

வாய்ப்புகளை இழந்து வந்த சமயத்தில் காயத்ரி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் மக்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்து வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கலந்து கொண்டு தொலைக்காட்சியையும் நடிகர் கமல்ஹாசனையும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த 2019ல் கார் விபத்து ஏற்படுத்தி சர்ச்சையிலும் சிக்கினார்.

அரசியல் பிரவேசம்:-

2015 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்து அக்கட்சியின் தமிழக கலை இலக்கிய அணி செயலாளர் பதவியினை செய்து வந்தார். பின் பாஜகவுக்கு ஆதரவாக பேசி சில விவாதங்களிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து கட்சியினர் காயத்ரியை நீக்கியுள்ளது.

இதை பலர் சமுகவலைத்தளத்தில் கிண்டல் செய்தும் வந்தனர். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டத்தை ஒரு நபர், முதலில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை வாழுங்க மேடம் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விவாகரத்தாகி தனியில் இருக்கும் நடிகையை மறுமணம் செய்ய சொன்ன நபர்! கோபத்தில் பிக்பாஸ் காயத்ரி | Gayathri Reply For Fans Message In Social Media

அதற்கு பதிலளித்த காயத்ரி, என்னுடைய குடும்பம் தான் என் கடவுள். அவர்கள் எனக்கு பல சகோதர சகோதரிகளை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் எனக்கு உதவி செய்வார்கள் என்றும் உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.