அதுல அஜித் நடிச்சது கேவலமான முடிவு!! கோபத்தில் பதிலடி கொடுத்த விக்ரம் பட நடிகை..

Ajith Kumar Gayathrie Gossip Today Tamil Actress
By Edward Aug 10, 2023 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காயத்ரி சங்கர். சமீபத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த காயத்ரி, தற்போது கிளாமர் ரோலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி அஜித் பற்றிய ஒருவர் காயப்படுத்தி ஒரு டிவிட் பதிவை பார்த்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதுல அஜித் நடிச்சது கேவலமான முடிவு!! கோபத்தில் பதிலடி கொடுத்த விக்ரம் பட நடிகை.. | Gayathrie Angry Reply For Man Trolling Ajith Movie

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வெளியாகி 4 வருடங்களை கடந்த நிலையில் அந்த படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது தான் கேவலமான ஒரு முடிவு என்று மோசமான விமர்சித்திருக்கிறார் அந்த நபர்.

மேலும், நேர்கொண்ட பார்வை முழுக்க முழுக்க ஏ செண்டர்களுக்கான படம் என்றும் விஸ்வாசம் எப்படி ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்ததோ அதைவிட பல மடங்கு பின்னடைவை நேர் கொண்ட பார்வை படம் கொடுத்தது.

அதுல அஜித் நடிச்சது கேவலமான முடிவு!! கோபத்தில் பதிலடி கொடுத்த விக்ரம் பட நடிகை.. | Gayathrie Angry Reply For Man Trolling Ajith Movie

அப்படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அஜித் மீது திணிக்கப்பட்டதாகவும் அவருக்கு அது சுத்தமாக செட்டாகவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு காயத்ரி, ஒரு படம் வெற்றி, பாக்ஸ் ஆபிஸை மட்டும் சார்ந்து இல்லை.

சமுகத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட விவாதத்தை நேர்கொண்ட பார்வை படம் ஏற்படுத்தி இருப்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதையும் கூறி பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காயத்ரி சங்கர்.