இயக்குனர் ஷங்கர் பார்த்த வேலையால் கதறி அழுத ஜெனிலியா!.. என்ன நடந்தது தெரியுமா?
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 -ம் ஆண்டு பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இதில் சித்தார்த், மணிகண்டன், பரத், நகுல், ஜெனிலியா, விவேக் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையில் செய்யும் சேட்டைகளும் அதனால் அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை குறித்து இப்படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த் பாய்ஸ் படத்தில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஜெனிலியா தினமும் டயலாக் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைவர். நான் தான் அவருக்கு வசனங்களை எல்லாம் தமிழில் சொல்லி தருவேன்.
ஒருமுறை இயக்குனர் ஷங்கர் இரண்டு பக்க கடினமான வசனத்தை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார்.
அப்போது அதை பார்த்த உடனேயே ஜெனிலியா அழ துவங்கிவிட்டார். இதையடுத்து நான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.