33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத விஜய்யின் ரீல் தங்கச்சி!! பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை..
Vijay
By Edward
தென்னிந்திய சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வரும் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கில்லி.
விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜெனிபர்.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் சீரியலில் நடித்தும் விஜேவாக பணியாற்றி வரும் ஜெனிபர் 30 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
திருமணமாகாமல் குழந்தை பெறாததை பார்க்கும் சமுதாயம் பேசும் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாப்பிடும் சாப்பாட்டின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சில வசனத்துடன் அந்த வீடியோ மூலம் பதிலடி கொடுத்ததற்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.