விஜய்யின் கில்லி படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. உண்மையை கூறிய பிரபலம்

Vijay Trisha
By Kathick Sep 19, 2025 04:30 AM GMT
Report

விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், கில்லி படம் வெளிவந்த சமயத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

விஜய்யின் கில்லி படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. உண்மையை கூறிய பிரபலம் | Ghilli Movie Was Loss For Producer

இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அவர்களின் நெருங்கிய நண்பரும் முக்கிய பிரபலமுமான ஒருவர் அளித்த பேட்டியில், "கில்லி படம் இன்று ரீ ரிலீஸில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், கில்லி ரிலீஸ் ஆன நேரத்தில் தயாரிப்பாளர் ரத்னம் தனது 14 கிரவுண்ட் இடத்தை எழுதி கொடுத்துதான் படத்தை ரிலீஸ் செய்தார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு ரூ. 60 - 70 கோடி ஆகும். ஆனால், அன்று ரூ. 2.90 கோடிக்கு எழுதி கொடுத்துதான் கில்லி படத்தை ரிலீஸ் செய்தார். அது அப்போது அவருக்கு லாபம் இல்லை" என அவர் கூறியுள்ளார்.

ஆனால், இதன்பின் கடந்த ஆண்டு கில்லி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது தயாரிப்பாளர் ரத்னத்திற்கு லாபம் கிடைத்ததாக திரை வட்டாரத்தில் கூறுகின்றன.